27 வயதில் 20 கின்னஸ் ரெக்கார்ட்… பாப் இளவரசியின் தடாலடி அசத்தல்!
- IndiaGlitz, [Wednesday,February 03 2021]
பாப் இசை உலகில் சமீபகாலமாக கொடிகட்டிப் பறந்து வரும் பாடகி Ariana Grande. அமெரிக்காவை சேர்ந்த இவர் பாடுவதில் மட்டுமல்ல சிறந்த நடிப்புக்காகவும் சிறந்த வடிவமைப்புக்காகவும் பெயர் பெற்றவர். கடந்த 2010 வாக்கில் பாப் இசை உலகிற்கு அறிமுகமான இவர் குறுகிய காலத்திலேயே இசைத் துறையில் 20 கின்னஸ் ரெக்கார்டுகளை வென்று விட்டார். இதனால் இசை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
புளோரிடா மாகாணத்தில் பிறந்த இவர் தன்னுடைய 4 ஆவது வயதில் அங்கு நடைபெற்ற ஒரு ஹாக்கி போட்டிக்காக அந்நாட்டு தேசிய கீதத்தைப் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் தொடர்ந்து சிறுமி என்ற காரணத்தால் இசைத் துறையில் ஓரம் கட்டப்பட்ட இவர் கடந்த 10 ஆண்டுகளாக இசைத் துறையில் விலக்க முடியாத ஒரு நட்சத்திரமாக வளர்ந்து விட்டார். தற்போது மரியோ கேரி, ரிஹானே, ஜஸ்டின் பைபர், டிரவிஸ் ஸ்காட், பிரிட்னி ஸ்பியர்ஸ் வரிசையில் கிராண்டேவும் இடம் பிடித்து இருக்கிறார்.
தற்போது இசை வரலாற்றிலேயே முதல் முறையாக இவர் பாடிய 5 பாடல்கள் பில்போர்ட் டாப் 100 வரிசையில் இடம் பெற்று இருக்கிறது. இந்தச் சாதனைக்காக 20 ஆவது கின்னஸ் ரெக்கார்ட்டை வென்று இருக்கிறார். இதற்கு முன்பு மரியா கேரி (1995-97), டிரேக் (2018-20), ஜஸ்டின் பைபர் (2015-20), டிரவிஸ் ஸ்காட் (2019-20) ஆகியோரின் தலா 3 பாடல்கள் இந்தத் தரவரிசையில் இடம் பிடித்தன. அதைத்தவிர பிரிட்னி ஸ்பியர் (2009-11), லேடி காகா (2011-20, பி.டி.எஸ் (2020) ஆகியோர்களின் தலா 3 பாடல்கள் டாப் 100 தரவரிசையில் இரண்டு முறை இடம் பிடித்தன.
ஆனால் இந்த சாதனையை எல்லாம் முறியடித்து உலகிலேயே முதல் முறையாக பில்போர்ட் டாப் 100 தரவரிசையில் 5 பாடல்களை இடம்பெறச் செயது கிராண்டே கின்னஸ் சாதனையை படைத்து இருக்கிறார். இது இவருடைய 20 ஆவது கின்னஸ் ரெக்கார்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிங்கிள் டிராக்கில் முதலிடம் பெற்ற அமெரிக்க பாடகி, யுகே பாடகி, ஒரே வாரத்தில் Spotify இல் அதிகம் கேட்டக்கப்பட்ட பாடல், Spotify இல் அதிக ஃபாலோயர்களைப் பெற்றது, இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களைப் பெற்றது எனத் தொடர்ந்து இசைக்காக பல கின்னஸ் விருதுகளை பெற்று இருக்கிறார். அதோடு இவர் போட்டுக் கொண்ட ஈவி டாட் டூக்காவும் ஒருமுறை கின்னஸ் விருது பெற்றிருக்கிறார். இத்தனை விருதுகளால்தான் இவர் “பாப் இளவரசி” என்றும் அழைக்கப்படுகிறார்.