'மெர்சல்' டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
1. விஜய் வேஷ்டி சட்டையுடன் ஒரு அரங்கில் நடந்து வரும்போது பின்னால் வடிவேலு வெள்ளை நிற கோட் சூட்டுடன் நிற்கின்றார்
2. இந்த டீசரில் மூன்று நாயகிகளான சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகியோர்களும், வில்லன் எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு காட்சியில் கூட இல்லை. அனேகமாக டிரைலரில் இவர்களை எதிர்பார்க்கலாம்
3. அப்பா விஜய்யின் காட்சிகள் கடந்த 70ஆம் ஆண்டுகளில் நடப்பது போல இருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் ஒரு காட்சியில் எம்ஜிஆரின் உழைக்கும் கரங்கள் படத்தின் கட் அவுட் உள்ளது.
4. அதேபோல் எம்.ஜி.ஆரின் ரசிகராக விஜய் இருக்கலாம். அவருடைய வீட்டின் சுவற்றில் எம்.ஜி.ஆர் படங்கள் உள்ளது.
5. மூன்று வித விஜய் டீசரில் தோன்றுவதால் மூன்று விஜய் உறுதியாகியுள்ளது. ஆனால் விஜய்-நித்யாமேனனுடன் ஒரு குழந்தை மட்டுமே ஒரு ஸ்டில்லில் இருப்பதால், ஒரு குழந்தை சிறு வயதிலேயே பிரிந்திருக்கலாம். கிளைமேக்ஸில் இருவரும் இணையலாம்
6. போலந்து நாட்டில் உள்ள PGE Areana ஸ்டேடியத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது
7. விஜய் முட்டி போட்டு உட்கார்ந்திருக்கும்போது வில்லன்களில் ஒருவர் அடி வாங்குகிறார். அனேகமாக இதுதான் இரு விஜய்கள் சந்திக்கும் காட்சியாக இருக்கும்
8. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அனேகமாக அது ஆளப்போறான் தமிழன் பாடலாக இருக்கலாம்
9. ராஜஸ்தான் பின்னணியில் மல்யுத்த காட்சிகளும் பாடல் காட்சிகளும் தெரிகிறது
10. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஒரு சபையில் விஜய் வேட்டிசட்டையுடன் கலந்து கொள்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com