நீ ஆம்பள பையன் தானே: பாலாஜியை கோபப்பட வைத்த ஆரி கேள்வி

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் அது மட்டுமின்றி இந்த வாரம் நாமினேஷனில் இருந்தும் அவர் காப்பாற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வரை முதல் இடத்தில் இருக்கும் பாலாஜி அடுத்த சுற்றில் மிகவும் தீவிரமாக விளையாடி வருகிறார். ஒரு கட்டத்தில் ஆரி மற்றும் பாலாவுக்கு இடையே கடும் போட்டி நடப்பதையடுத்து வழக்கம்போல் டாஸ்க் நடைபெறும்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நடைபெறுகிறது.

’ஓடுவதுதான் உங்கள் தந்திரம் என்றால் எனக்கும் தந்திரம் தெரியும்’ என்று பாலாஜி கூற, அதற்கு ஆரி, ‘இதுமாதிரி விளையாடுகிறாயே தடுக்கி விழுந்து விட்டால் என்ன ஆவது? என்று கூற ’அப்படி என்றால் ஓடாதீர்கள்’ என்று பாலாஜி கூறுகிறார். அப்போது பாலாஜியை வெறுப்பேற்றும் வகையில் ’ஓடணும் என்றால் ஓடி வந்து பிடிக்க வேண்டும், நீ ஆம்பள பையன் தானே’ என்று கூற பாலாஜி அவரை கடுப்புடன் முறைக்கின்றார். மேலும் ‘நீங்கள் விழ வேண்டும் என்பதற்காக நான் போடவில்லை, ஓடக் கூடாது என்பதற்காக போட்டேன்’ என்று கூறிவிட்டு ‘உங்களுக்கு சகிப்புத்தன்மை இருக்கு எனக்கு பலம் தான் இருக்குது’ என்று கூறுகிறார்.

இதை அடுத்து ஆரி, ‘இதுமாதிரி கேம் விளையாடுவதற்கு சும்மாவே இருந்துவிட்டு போகலாம் என்று கூற அதற்கு பாலாஜி ’நான் நன்றாகத்தான் விளையாடுகிறேன்’ என்று பதிலடி கொடுக்கிறார். மொத்தத்தில் இந்த சுற்றிலும் ஆரி தோல்வி அடைந்துவிட்டதால் விரக்தியில் இருப்பது போன்றும் பாலாஜி வெற்றிபெற்றது போன்றும் தெரிகிறது.