மகளிர் தினம் கொண்டாட நாம் தகுதியானவர்கள்தானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூன்று மாத கர்ப்பிணியை காவு கொடுத்துவிட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் இருந்தனர். அதிலும் அந்த பெண்ணின் மரணத்திற்கு ஒரு காவல்துறை அதிகாரியே காரணமாக இருந்தது கொடுமையிலும் கொடுமை.
அதேபோல் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே அந்த பெண், கொலை செய்த நபர் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையை தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த ஐடி பெண் ஊழியர் லாவண்யா மீது தாக்குதல், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை, சிறுமி ஹாசினி பாலியல் தொல்லை மற்றும் கொலை என தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை அடுக்கி கொண்டே போகலாம். என்ன செய்கிறது தமிழக அரசும் தமிழக காவல்துறையும்?
காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்த அடுத்த தினமே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்க காரணம் என்ன? என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அரசையும் காவல்துறையையும் மட்டும் குறை சொல்ல முடியாது. சிறு வயதில் இருந்தே ஒரு ஆணுக்கு பெண்ணை மதிக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்று கொடுக்க வேண்டும். தற்கால அவசரமயமான உலகில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவதால் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்திலும் செல்போனில் மூழ்கி விடுகின்றனர்.
இண்டர்நெட்டிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்களை செய்ய வைக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளது மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நாம் ஒவ்வொருவரும் தான் காரணம். தனிமனித ஒழுக்கத்தை இந்த சமூகம் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்கவில்லை என்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறைய போவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை மகளிர் தினம் கொண்டாடினால் மட்டும் போதாது, அந்த மகளிர் தினத்தை கொண்டாடும் தகுதி நமக்கு இருக்கின்றதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இனியாவது திருந்துவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout