தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகிறதா???

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

 

கொரோனா தொற்றை அடுத்து கடந்த 7 மாதங்களாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து ஊரடங்கு விதிமுறைகள் பெரும்பாலும் தளர்த்தப் பட்டுள்ள நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வருகிற 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் எனக் கூறப்பட்டு இருந்தது. அதில் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் மீண்டும் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகப் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் தொடங்கி இருக்கிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப் படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும்போது மீண்டும் அதிக தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில் அரசு இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருககிறது.

இந்நிலையில் நேற்று மாலை தமிழக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அசோக் வரதன் ஷெட்டி நேற்று தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து மீண்டும் தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே கொரோனா தொற்று, பண்டிகைகாலம் மற்றும் பருவமழை போன்ற காரணங்களை ஒட்டி தமிழக அரசு பள்ளி, கல்லூரி திறப்புகளை மீண்டும் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பொங்கலுக்குப் பிறகுதான் பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது போன்ற ஒரு விவாதங்களும் பொதுவெளியில் உலா வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதுகுறித்த எந்த விளக்கத்தையும் இதுவரை வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள்… 19 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

ஆப்கானிஸ்தானில் குவிந்து இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு படையை விலக்கி கொள்ளுமாறு கடந்த சில ஆண்டுகளாகவே கிளர்ச்சியாளர்கள் அங்கு கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

தயாநிதி அழகிரிக்காக இணையும் விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்!

அஜீத் நடித்த 'மங்காத்தா' உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்த தயாநிதி அழகிரி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்பதையும், அவர் இயக்கிய குறும்படத்திற்கு 'மாஸ்க்' என்ற டைட்டில்

எடை குறைந்த ராமேஸ்வரம் கோயில் நகைகள்: 40 ஆண்டுகளுக்கு பின் சோதனையில் கண்டுபிடிப்பு

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் ஆபரண நகைகள் எடை குறைந்தது தொடர்பாக 30 குருக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆஸ்பத்திரி அறையில் கள்ளக்காதலனுடன் நர்ஸ்: வெளியே பூட்டி சிறை வைத்த பொதுமக்கள்

கன்னியாகுமரி அருகே 35 வயது நர்ஸ் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் மருத்துவமனை அறை ஒன்றில் உல்லாசமாக இருந்ததை அடுத்து, அந்த பகுதி பொதுமக்கள் அவர்களை பூட்டி சிறை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனா விஷயத்தில் இந்தியர்கள் கொடுத்து வச்சவங்க… ஆய்வில் வெளியான பரபரப்பு தகவல்!!!

பாதுகாப்பு இல்லாத குடிநீர், சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, நெருக்கமான சூழல் போன்றவை இந்தியாவில் காணப்படுகிறது.