கொரோனா விஷயத்தில் இந்தியர்கள் கொடுத்து வச்சவங்க… ஆய்வில் வெளியான பரபரப்பு தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாதுகாப்பு இல்லாத குடிநீர், சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, நெருக்கமான சூழல் போன்றவை இந்தியாவில் காணப்படுகிறது. எனவே கொரோனா தாக்கத்தால் இந்தியா கடுமையான நிலைமைகளை சந்திக்கப் போகிறது என சில மாதங்களுக்கு முன்பு உலகச் சுகாதார அமைப்பு இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து இருந்தது. ஆனால் உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பு குறைவாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்தியா இருந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என ஒரு ஆய்வுச் சுட்டிக் காட்டுகிறது. நெருக்கமான வாழ்க்கை முறையைக் கொண்ட இந்தியாவில் இது எப்படி சாத்தியம் என்று பலரும் கேள்வி எழுப்பலாம். ஆனால் விஞ்ஞானிகள் இதற்கு சரியான விளக்கத்தை அளித்து உள்ளனர்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் குழந்தை பருவத்தில் இருந்தே பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அவர்கள் அடிக்கடி நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதால் பாக்டீரியா, வைரஸ், நிம்மோனியா போன்ற சில நோய்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உடலில் கொண்டு இருக்கின்றனர். இதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக வலிமை கொண்டதாக மாறுகிறது.
அதே நடைமுறைதான் கொரோனா விஷயத்திலும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு மண்டலங்களில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளுக்கு எதிராக இந்தியர்களின் உடலில் இருக்கும் ஆன்டிபாடிகள், கொரோனா நோய்க்கும் எதிராக பலமாகப் போராடுகிறது. இதைத்தான் புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டு இருக்கிறது.
இந்தியர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்தாலும் அவர்கள் பாக்டீரியா போன்ற நோய்களுக்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு மண்டலங்களை கொண்டிருக்கிறார்கள். அந்த நோய் எதிர்ப்பு மண்டலம் கொரோனாவிற்கு எதிராகவும் போராடுகிறது. கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு இந்த நோய் எதிர்ப்பு மண்டலம் உதவாது என்றாலும் நோய்க்கு எதிராக வலிமையான போராட்டத்தை இது நடத்துகிறது. எனவே இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறது.
நோய்த் தொற்றில் மனித உடலுக்குத் தேவையான டிரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை செல், ஆர்க்கியா போன்றவை காணப்படுகிறது. இவை செரிமானத்துக்கு மிகவும் உகந்தவையாக இருக்கிறது. எனவே நோயை உண்டாக்கும் பாக்டீரியாவில் இந்த செரிமானத் தன்மைகள் சில நேரம் நம்மை‘ பாதுகாக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது வலுப்படுத்துகிறது.
பாக்டீரியாக்கள் பொதுவாக கடுயைமான நிமோனியா இரத்தம் மற்றும் சிறுநீர் பாதை மற்றும் தோல் நோய்த் தொற்றுக்கு காரணமாகின்றன. ஆனால் அவை ஆண்டிவைரஸ் சைட்டோகைனை உருவாக்கும் என்று நம்பப்படுகிது. நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும் மூலக்கூறுகள் இன்டர்ஃபெரான் எனப்படும் இது கொரோனா வைரஸுக்கு எதிராக செல்களைப் பாதுகாக்கிறது.
இந்தக் கருதுகோளை குறித்து மேலும் அதிகமான ஆய்வுகள் தேவை என விஞ்ஞானிகள் கூறிவரும் நிலையில் தென் கரோலினா மருத்துவப் பல்கலைக் கழகத்தின் தொற்று நோய்களில் உதவிப் பேராசிரியரான கிருத்திகா குப்பள்ளி இக்கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். எது எப்படியோ சேறு சகதியில் வாழ்ந்து வந்தாலும் ஓரளவிற்கு நோய்க் கிருமிகளுக்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு மண்டலங்களை கொண்டிருப்பதால் இந்தியர்கள் தற்போது பாதுகாப்பாக இருக்க முடிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments