இந்திய சினிமாவில் 'பாகுபலி'யை அடுத்து 'பிகில்' தான்: அர்ச்சனா கல்பாதி

  • IndiaGlitz, [Thursday,September 19 2019]

இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு சென்ற திரைப்படம் என்றால் பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்களின் ’பாகுபலி’ தான். இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாதான் என்று உலக திரைப்பட ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தென்னிந்தியாவிலிருந்து உலக தரத்தில் ஒரு பிரம்மாண்ட படம் உருவாக்க முடியும் என்பதை முதன்முதலில் நிரூபித்தது ’பாகுபலி’ திரைப்படம் தான். அது மட்டுமின்றி இந்தியாவில் தயாரான வரலாற்று திரைப்படங்களில் ஒரு புதிய பரிணாமத்தை பாகுபலி திரைப்படம் கொண்டுவந்தது.

இந்த நிலையில் பாகுபலி போலவே ’பிகில் திரைப்படம் வெளி வந்ததும் இந்தியாவில் உள்ள விளையாட்டு திரைப்படங்களில் ஒரு பரிணாமத்தை முகத்தை இந்த படம் கொடுக்கும் என்று ’பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் இன்று நடைபெற்ற ’பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஆறு வருடங்கள் காத்திருந்தோம் என்றும், எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய திரைப்படம் இதுதான் என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

மேலும் இந்த படத்திற்காக தளபதி முதலில் 150 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருந்தார் என்றும் ஆனால் எதிர்பாராத காரணத்தினால் படப்பிடிப்பு நீடித்த நிலையில் அவர் கூடுதலாக 20 நாட்கள் நடித்தார் என்றும், அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அர்ச்சனா கல்பாதி அவர்கள் தெரிவித்தார்.