மிஸ் திருநங்கை 2021 போட்டியில் சாதனை படைத்த முதல் இந்தியத் திருநங்கை…குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மூன்றாம் பாலினமான திருநங்கைகள் உலகம் முழுவதும் தங்களுக்கு உரிய மதிப்பு மற்றும் சம வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, சமூகத்தில் உரிய மதிப்பு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மிஸ் திருநங்கை என்ற போட்டியும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான திருநங்கை போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஆர்க்கி எனும் திருநங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார். இவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மிஸ் திருநங்கை(2) பட்டம் பெற்ற ஆர்க்கி தற்போது கவனம் பெற்ற ஒருவராக மாறியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த இவர் தனது 17 ஆம் வயதிலேயே வீட்டைவிட்டு வெளியே வந்து மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதைக்காக பல சமூக அமைப்புகளிலும் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். பல விளம்பர தயாரிப்பு நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட இவர் தற்போது 22 ஆம் வயதில் மிஸ் திருநங்கை (2) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மிஸ் திருநங்கை போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவை சேர்ந்த ஒருவர் பட்டம் பெறுவது இதுவே முதல் முறை ஆகும். ஆர்க்கியின் இந்த புது சாதனையால் தான் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்திருப்பதோடு தான் சார்ந்த சமூகத்திற்கு, புது மதிப்பையும் அடையாளத்தையும் பெற்று தந்திருப்பதாக உற்சாகத்தோடு ஆர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout