அர்ச்சனா தான் டாப் 2.. சொன்னது யார் தெரியுமா? மாயா, பூர்ணிமா அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா டாப் 2ஆக வருவார் என்று சக போட்டியாளர் கூறியதை கேட்டு பூர்ணிமா மற்றும் மாயா அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர்களில் தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவருமே சூப்பராக விளையாடுகின்றனர். பிராவோ மற்றும் கானா பாலா இருக்கிறார்களா அல்லது இல்லையா என்பது கூட தெரியவில்லை. அன்னபாரதி முதல் வாரமே வெளியேறிவிட்டார்.
இந்த நிலையில் பூர்ணிமா, மாயா, ஐஷு, ஜோவிகா, ஆகியோர் டாப் 2 குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது அர்ச்சனா தான் அநேகமாக டாப் 2ஆக என்று ஐஷு கூறுகிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூர்ணிமா, டாப் 2 செல்லும் அளவுக்கு அவர் என்ன விளையாடிவிட்டார் என்று கூறினார்.
மேலும் ஒருவேளை அர்ச்சனா மற்றும் விசித்ரா ஆகிய இருவருக்கும் இடையே போட்டி வந்தால், அர்ச்சனாவை விசித்ரா தள்ளிக்கொண்டு சென்றால் ’மேம் மேம்’ என்று அர்ச்சனா கத்துவார் என்று பூர்ணிமா கிண்டல் செய்கிறார்.
இதனை அடுத்து இந்த வாரம் யார் வெளியே போவார் என்று பேச்சு வந்தது. அதில் பிராவோ போக வாய்ப்பு இருப்பதாக ஐஷு கூறினார். அக்சயா போகலாம் என்று ஜோவிகா கூறுகிறார். நானே கூட போக வாய்ப்பு இருக்கு என்றும் ஐஷு கூறுகிறார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
BBH's Nominations மற்றும் Top2ல் யார் இருப்பார்கள் என்பதை பற்றி பேசுகிறார்கள்#BiggBoss7Tamil#BiggBossTamil7 #BiggBossTamil pic.twitter.com/AFI3Rkkuci
— BBTamilVideos (@BBTamilVideos) November 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments