எந்த பெட்டியிலும் நீ கைவைக்க கூடாது: டைட்டில் வின்னர் யார் என்பதை மறைமுகமாக கூறிய அர்ச்சனா சகோதரி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குடும்பத்தினர் வருகை தரும் வாரம் என்பதால் கலகலப்பாக உள்ளது என்பதும் சில நேரங்களில் சென்டிமென்ட் ஆக இருந்தது என்பதையும் பார்த்தோம். வெளியில் இருந்து வந்த குடும்பத்தினர் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகள் கூறினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே அர்ச்சனாவின் அம்மா அப்பா வந்த நிலையில் இன்று அர்ச்சனாவின் சகோதரி வந்தார். கலகலப்பாக அனைத்து போட்டியாளர்களிடமும் அவர் பழகிய நிலையில் அர்ச்சனாவிடம் சில விஷயங்களை சொல்கிறார். அவற்றில் ஒன்று ’நீ எந்த காரணத்தை முன்னிட்டும் பெட்டியை எடுக்கக்கூடாது, நீ கை வைக்க வேண்டியது துணிப்பெட்டி மட்டும் தான், வேற எந்த பெட்டியிலும் கை வைக்க கூடாது’ என்று கூறுகிறார்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் பணப்பெட்டி என்ற ஒரு டாஸ்க் வரும். அதில் உள்ள தொகையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிடலாம் என்று பிக் பாஸ் அறிவிக்கும் நிலையில் ஒரு சிலர் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுவார்கள்.
ஆனால் நீ பணப்பெட்டியில் கை வைக்க கூடாது என்பதை மறைமுகமாக ’நீ துணிப்பட்டியை தவிர வேறு எந்த பெட்டியிலும் கை வைக்க கூடாது என்று அர்ச்சனா சகோதரி கூறுகிறார். இதன் உள்ளர்த்தமாக ’நீ டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் ஆதனால் அவசரப்பட்டு பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வர வேண்டாம்’ என்றும் அவர் மறைமுகமாக சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Archana's sister : Thuni petti la thavira vera endha petti la yum nee kai vaika kudathu ! Brilliant way of conveying many things.
— Akshay (@Filmophile_Man) December 20, 2023
Thuni petti, Pana Petti..Vera enna petti ?#BiggBossTamil7 #BiggBossTamil#VJArchana pic.twitter.com/D5atyTsNkz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments