close
Choose your channels

இதனால் தான் கேபியை என் மகள் என்றேன்: அர்ச்சனா வெளியிட்ட அன்பு புகைப்படம்!

Tuesday, February 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒரு சிலரை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அன்பு குரூப் வைத்திருந்ததாக அர்ச்சனா மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தான் காட்டும் அன்பு உண்மையானது என்றும் அன்பு ஜெயிக்கும் என்றும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும் சரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் சரி அதனை தொடர்ந்து அர்ச்சனா வலியுறுத்தி வருகிறார்

குறிப்பாக கேபி மீது அவர் வைத்திருந்த அன்பு அலாதியானது என்பதும் அவரை தன் மகள் போன்றே பார்த்ததாகவும் அவர் பலமுறை கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேபி மற்றும் மகள் சாரா ஆகிய இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அர்ச்சனா பதிவு செய்துள்ளார்

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இரண்டு சிறுமிகள். இவர்களில் நான் ஒருவரை இன்னொருவரிடம் பார்க்கிறேன். நான் பிக்பாஸ் வீட்டிற்குச் சென்றபோது எனது மகளை தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் கேபியை என்னுடைய மகள் உருவில் கண்டேன்

சிலர் என்னிடம் கேட்பார்கள், நீங்கள் எப்படி வேறு ஒருவரை மகளாக பார்க்க முடியும் என்று? என் இதயத்தில் இருந்து நீங்கள் பார்த்தால் கேபியும் என் மகள் தான் என்பதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள் என்று கூறியுள்ளார். அர்ச்சனாவின் இந்த உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment