மணி - ரவீனா பாத்ரூமில் என்ன செய்றாங்க...அர்ச்சனா கேட்ட அதிரடி கேள்வி..
- IndiaGlitz, [Saturday,November 18 2023]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் காதலர்களாக மணி மற்றும் ரவீனா உலவி வரும் நிலையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அர்ச்சனா அனைவர் முன்னிலையிலும் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்து காதலர்களாக மணி, ரவீனா நடமாடி வருகின்றனர். ஏற்கனவே வெளியில் இருக்கும் போது இருவரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் அவர்கள் தங்கள் காதலை தொடர்ந்து வருகின்றனர்.
மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொள்வது, லிவிங் ரூமில் அனைவர் முன்னிலையில் கொஞ்சுவது உட்பட சில நேரங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சில நேரங்களில் அவர்கள் அத்துமீறுவதாகவும் பார்வையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்
இந்த நிலையில் எல்லோரும் லிவிங் ரூமில் இருக்கும் போது, மணி, ரவீனாவை மட்டும் காணவில்லை என அர்ச்சனா போட்டு உடைத்தது சக போட்டியாளர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இருவரும் அடிக்கடி ஒரே நேரத்தில் பாத்ரூம் செல்வதாகவும், டை அடிக்க போவதாக சொன்னாலும் அவர்கள் அதிக அளவு பிக் ஹவுஸ் பாத்ரூம் பயன்படுத்துவதில்லை. கேமரா அடிக்கடி கவர் பண்ணாத ஸ்மால் ஹவுஸ் பாத்ரூமை தான் பயன்படுத்துவதாக பார்வையாளர்கள் கவனித்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென அர்ச்சனாவும் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீச் உட்பட பொது இடத்தில் சில காதலர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வது போல் பிக் பாஸ் வீட்டில் மணி ரவீனா நடந்து கொள்வதாகவும், இதை பார்க்கும் போது தனக்கு அருவருப்பாக இருப்பதாகவும் அர்ச்சனா கூறியுள்ளார்
இதற்கு மணி, ரவீனா என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? சக போட்டியாளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.