கடைசி வாரத்துல ஜாலி பண்ணலாம்ன்னு நினைச்சேன்.. இப்படி பண்ணிட்டிங்களே: புலம்பிய போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் ‘கடைசி வாரத்தில் ஜாலி பண்ணலாம்ன்னு என்று நினைத்தேன், ஆனால் இப்படி பண்ணிட்டீங்களே பிக்பாஸ்’ என மாயா புலம்பும் காட்சிகள் உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில் கடைசி வாரத்தில் போட்டியாளர்கள் எப்படியாவது டைட்டில் பட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக பல தந்திரங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக அர்ச்சனாவை எப்படியாவது பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதில் ஒரு சில போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து குறியாய் இருப்பது போல் தெரிகிறது.
இந்த நிலையில் மாயாவுடன் அர்ச்சனா பேசிக் கொண்டிருக்கும் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது கசிந்துள்ளது. அதில் விஷ்ணு மற்றும் தினேஷ் குறித்து அர்ச்சனா கூறும் போது ’ஏமாற்றுக்காரன், பிராடு என்ற வார்த்தைகளை தான் அவர்கள் பயன்படுத்தவில்லையே தவிர, இதுதான் அவர்கள் என்னை சொல்ல வருகிறார்கள். அவங்க பேசும் ஒவ்வொரு விஷயமும் பொட்டு பொட்டு என என் மனதை பாதிக்கிறது. ஏனென்றால் என்னுடைய மனதில் அவர்களுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்தேன்’ என்று சொல்கிறார்.
அப்போது மாயா ’இவங்க எப்பவுமே ரொம்ப வன்மத்தை கக்கிட்டாங்களோ என்று எனக்கு தோன்றுகிறது’ என்று கூறுகிறார் ’கடைசி வாரத்தில் ஜாலி பண்ணலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்படி பண்ணிட்டீங்களே பிக்பாஸ்’ என மாயா புலம்புவதுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவு வருகிறது
மொத்தத்தில் அர்ச்சனாவை எப்படியாவது காலி பண்ண வேண்டும் என ஒரு குரூப் அலைந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது முடிவு என்ன ஆகுமோ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
#Promo3
— Aadhavi (@Classicparktv) January 8, 2024
🥁
Ella promo vum Leaked. #BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7Tamil pic.twitter.com/KfRUrEibsv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments