எல்லை மீறிய ரசிகர்கள்: அர்ச்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அர்ச்சனா, வீட்டிற்கு வந்து முதல் வாரத்தில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்திருப்பார் என தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய விமர்சனத்திற்கு அவ்வப்போது பதில் கொடுத்து வருகிறார் என்பதில் இருந்தே இது உறுதியாகிறது.
இந்த நிலையில் அர்ச்சனாவின் அன்பை கேலி செய்யும் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்கள். ஒருசிலர் எல்லை மீறி அர்ச்சனாவின் அன்பை கிண்டல் செய்கிறார்கள். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவர் விதைத்து வைத்த அன்பு குரூப் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், இதற்கு முழு காரணம் அர்ச்சனா தான் என்றும் போட்டியாளர்கள் தனித்தன்மையுடன் விளையாடுவதை அவர்தான் கெடுத்து விட்டார் என்றும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
பொதுவாக ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டால் அவரைப் பற்றி ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் அர்ச்சனாவை இன்னும் ஒரு சில ரசிகர்கள் மறக்காமல் வம்புக்கு இழுத்து கொண்டே உள்ளனர்.
இந்த நிலையில் அர்ச்சனா அதிரடியாக டுவிட்டரில் இருந்து தான் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த அன்பினால் நான் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன் என்றும், வெறுப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற தனகு சோர்வாக உள்ளது என்றும் அவர் கூறிய தான் டுவிட்ட்ரிலிருந்து வெளியேறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
எனது வெறுப்பாளர்கள் இதனை கொண்டாட தயாராகுங்கள் என்று கூறிய அர்ச்சனா, ஆனால் நான் மீண்டும் இதைவிட வலுவாக முன்னேறுவேன் என்றும் அவர் நம்பிக்கையும் கூறியுள்ளார். மேலும் இனிமேலாவது நீங்கள் கேலியும் கிண்டலும் செய்வதற்கு அடுத்த நபரை கண்டுபிடியுங்கள் என்றும் அவர் கூறி விட்டு டுவிட்டருக்கு ‘பை’ சொல்லியுள்ளார்.
I’m exhausted in this love- hate whirlpool!! Tired of clearing speculation!! For the haters who are all set to celebrate my exit from Twitter, I will bounce back stronger! Find your next victim! Goodbye Twitter!! #SpreadLoveNotHate #Iamwhoiam #LifeBeyondBiggBoss @vijaytelevision
— Anchor_Archana_official (@ArchanaChandhok) December 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com