விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த அர்ச்சனா கல்பாத்தி.. விஜய் ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ நேற்று வெளியான நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படம் வெற்றி படமாகி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதியின் 50வது படம் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருவதை கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டாக தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அடுத்த பதிவில் இந்த மாதம் தளபதி விஜய்யின் ஸ்பெஷல் மாதம் என்பதால் ’கோட்’ படத்தின் அப்டேட்டுகளையும் அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய்யின் பிறந்தநாளில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி ’கோட்’ படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்டுகள் காத்திருக்கிறது என்பது எனக்கு தெரிய வருகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.