பிகில் டீசர் எப்போது? அர்ச்சனா கல்பாதி தகவல்

  • IndiaGlitz, [Saturday,October 05 2019]

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் டீசர் எப்போது என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் கண்டிப்பாக பிகில் படத்தின் டீஸர் வெளியாகும் என இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆனால் அக்டோபர் முதல் வாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் பிகில் டீசர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அர்ச்சனா கல்பாதி அவர்கள் ’இந்த வாரம் பிகில் டீசர் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும், அடுத்த வாரம் கண்டிப்பாக டீசரை வெளியிட முயற்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பிகின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வரும் திங்கள் அன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘பிகில்’ படம் வெளியாக இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் டீசரே வெளியாகவில்லை என்பதே தளபதி ரசிகர்களின் அதிருப்திக்கு காரணமாக உள்ளது. இருப்பினும் டீசரையும் படத்தையும் பார்த்த பின்னர் தயாரிப்பு தரப்பின் மீதான ரசிகர்களின் கோபம் தணிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த 3 ரிலீஸ்!

நேற்று வெளியான தனுஷின் 'அசுரன்' திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவர உள்ள படங்கள்

நிகழ்ச்சி முடிவடையும் நேரத்திலும் வனிதாவை கலாய்க்கும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது முகின், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகின் ஆகிய நால்வர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இது டிரைலர்தான் மெயின் பிக்சர் இனிமேல்தான்: மதுமிதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, திடீரென தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பேனர் விவகாரம்: சூர்யா, தனுஷ் ரசிகர்களை மிஞ்சிய விஜய்சேதுபதி ரசிகர்கள்

பேனர் கலாச்சாரத்தால் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில் இந்த மரணத்திற்கு பின் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகளும், மாஸ் நடிகர்களும் அறிவித்தனர்.

புதிய லுக்குடன் அஜித் சென்றது எங்கே தெரியுமா?

நேற்று சென்னை விமான நிலையத்தில் தல அஜித்தை புதிய இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அவருடன் செல்பி எடுக்க முண்டியெடுத்தனர்.