ஒரே நாளில் 2 அப்டேட்டுக்கள் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.. விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை தயாரித்து வரும் அர்ச்சனா கல்பாத்தி ஒரே நாளில் இரண்டு முக்கிய அப்டேட்டுகளை கொடுத்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்ததாகவும், டீஏஜிங் சம்பந்தப்பட்ட காட்சிகளை விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’கோட்’ படத்தின் தொழில் நுட்ப பணிகள் தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளார். இதிலிருந்து ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் தொடங்கிவிட்டது என்று முக்கிய அப்டேட்டை அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன் பணிகளும் நடக்கும் என்றும் ஏற்கனவே சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில் செகண்ட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா ஆகியவை அடுத்தடுத்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த இரண்டாவது அப்டேட்டாக அவர் தயாரித்து வரும் இன்னொரு படமான ’டிராகன்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்று அறிவித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததால் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ச்சனா கல்பாத்தியின் இந்த 2 அப்டேட்டுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

ஜிவி பிரகாஷை பிரிகிறேன்.. 11 ஆண்டு திருமண பந்தம் முறிந்ததாக சைந்தவி அறிவிப்பு..!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து இருப்பதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும்

தாய்மை தள்ளி போக காரணம் என்ன? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சிகரமான தகவல்.

அறிவியல் ரீதியாக ஒரு பெண் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு அந்த பெண் 30% மட்டுமே காரணமாக இருக்கிறாள்.இதற்கு கர்பப்பை டுயுப் அல்லது ஹார்மோனல் மற்றும் pcos கூட காரணமாக இருக்கலாம்...

சூரி - சசிகுமாரின் 'கருடன்' கிளிம்ப்ஸ் வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

சூரி மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்த 'கருடன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர்கள்

'வேட்டையன்' படத்தின் மாஸ் தகவல்.. ரஜினியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் ரஜினி காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக

விஜய்யின் 'கோட்' படத்தில் கேப்டன் விஜயகாந்த் காட்சி எத்தனை நிமிடங்கள்? ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தோன்ற இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது காட்சி எத்தனை நிமிடங்கள் என்பது குறித்த