பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவின் இரங்கல் செய்தி!

  • IndiaGlitz, [Tuesday,August 06 2019]

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்கள் இன்று தனது 93வது வயதில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவரது மறைவிற்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் தயாரிப்பாளரும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓவுமான அர்ச்சனா கல்பாதி அவர்கள் ராஜலட்சுமி அவர்களின் மறைவிற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் ஒவ்வொரு மாணவருக்கும் இன்று ஒரு துக்கரமான நாள். நாம் விரும்பும் ஒவ்வொன்றையும் நம் கனவு நனவாகவும் அவர் சொல்லி கொடுத்தார். நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இப்படி ஒருவர் இருந்தது நமது பெருமையே. நம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்த காரணமாக இருந்த ஒரு உண்மையான பெண்ணியவாதி. உங்கள் இழப்பு எங்களுக்கு ஈடு இணையில்லாத இழப்பு. உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்' என்று கூறியுள்ளார்.