பிகில் டிரைலர் ரன்னிங் டைம்: அர்ச்சனா கல்பாதியின் டுவீட்

  • IndiaGlitz, [Friday,October 11 2019]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் விஜய் ரசிகர்களால் யூடியூபில் ஒரு புதிய சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நிலையில் சற்று முன் பிகில் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் பிகில் டிரைலர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் பிகில் டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த ட்ரெய்லரின் ரன்னிங் டைம் எவ்வளவாக இருக்கும்? என்பதை யூகித்து சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில் பிகில் படத்தின் டிரைலர் 2 நிமிடங்களுக்கு குறைவாகவும், இரண்டு முதல் இரண்டேகால் நிமிடம் வரையிலும் இரண்டேகால் முதல் இரண்டரை நிமிடம் வரையிலும், இரண்டரை நிமிடத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் நான்கு ஆப்ஷன்களை கொடுத்துள்ளார்.

பெரும்பாலான தளபதி ரசிகர்கள் இரண்டு முதல் இரண்டரை நிமிடங்கள் ‘பிகில்’ டிரைலர் இருக்குமென்று கூறியுள்ளனர். ரசிகர்களின் யூகம் சரியானதா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஹன்சிகாவின் அடுத்த படத்தில் வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்!

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தத்தளித்து வந்த போதிலும் தற்போது அவர் 'மஹா' உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

கே.பாலசந்தர் படத்தில் பணிபுரிந்த சாக்சோபோன் கலைஞர் காலமானார்

கே.பாலசந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்திரி, பிரகாஷ்ராஜ் நடித்த 'டூயட்' என்ற படம் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் பிரபு ஒரு சாக்சோபோன் கலைஞராக நடித்திருப்பார்.

இயக்குனர் சங்கத்திற்கு சூர்யா செய்த சிறப்புக்குரிய உதவி!

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நடிகர் சூர்யா தங்கக்காசுகள் வழங்கி கெளரவித்தார் என்பது தெரிந்ததே

ரஜினிகாந்த் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு விளக்கம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நாளை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாய்ப்புகளை இழந்து வரும் மீராமிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் புகழ் பெறலாம், கோலிவுட் வாய்ப்புகள் குவியும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் கூறுவதுண்டு.