ஆமாம்.. இது தளபதி பொங்கல் தான்.. தரமான அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி..!

  • IndiaGlitz, [Sunday,January 14 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்

இந்த நிலையில் சற்றுமுன் வெங்கட் பிரபு தனது சமூக பல தளத்தில் ’அர்ச்சனா கல்பாத்தி அவர்களே, ’கோட்’ படத்தின் பொங்கல் சிறப்பு விருந்து உண்டா? என்று கேட்ட நிலையில், அவரும் ’கண்டிப்பாக உண்டு, இந்த பொங்கல் தளபதி பொங்கல் தான்’ என தெரிவித்துள்ளார்

இதையடுத்து நாளை ’கோட்’ படத்தின் தரமான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்களுக்கு நாளை வெளிவரும் அப்டேட் மிக சிறப்பான பொங்கல் பரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு தினத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் நாளை வெளியாகும் அப்டேட்டையும் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.