'கோட்' படப்பிடிப்பின் ரஷ்யா லொகேஷன் இதுதான்.. அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,April 07 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் விஜய் உட்பட குழுவினர் ரஷ்யா சென்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ள லொகேஷன் குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது என்பதும் இந்த படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ள நிலையில் படப்பிடிப்பு குறித்த தகவல்களை அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவின் அட்டகாசமான லொகேஷனில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது இந்த புகைப்படங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் ரஷ்ய படப்பிடிப்புடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விடும் என்றும் அதன் பிறகு முழு முயற்சியில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்றும் அதை அடுத்து டீசர், டிரைலர் ஆகிய புரமோஷன் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

More News

'இந்தியன் 2' படத்திற்கு முன்பே ரிலீஸாகும் கமல் படங்கள்.. அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைகிறாரா 'ஜெயிலர்' நடிகர்?

அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம்

'நான் செத்ததில் இருந்தே இங்கதான் இருக்கிறேன்': பார்த்திபனின் பேய்ப்படம் 'டீன்ஸ்' டிரைலர்..!

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'டீன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த சந்தோஷம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட வராது..ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ..!

இந்த சந்தோஷம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட வராது என்று நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மனத் துஷ்பிரயோகத்தினால் ஏற்படும் மன நோய்கள்.

மன துஷ்பிரயோகம் என்பது உணர்வு ரீதியாக ஒருவரை காயப்படுத்துவது,வார்த்தைகளால் தாக்குவது, விமர்சிப்பது, குற்றம் சாட்டுவது,அவர்களுடைய உணர்ச்சிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவது போன்றவை அடங்கும்...