'தளபதி 63' படம் குறித்த ஒரு சர்ப்ரைஸ் தகவல்

  • IndiaGlitz, [Friday,January 25 2019]

தளபதி விஜய், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையில் அருகில் உள்ள ஒரு மில்லில் நடந்து வருவதால் விஜய்யை பார்க்க அந்த பகுதியில் அவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து விஜய்யின் ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, இன்று மாலை 6 மணிக்கு 'தளபதி 63' படம் குறித்த ஒரு முக்கிய தகவலை அறிவிக்கவிருப்பதாக பதிவு செய்துள்ளார். இது தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலாக கருதப்படுகிறது.

பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.