அந்த குடையின் கீழ் இருந்த நடிகை இவர் தான்.. 'கோட்' ரகசியத்தை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது..
மேலும் இன்று அதிகாலை 12.01 மணிக்கு இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான நிலையில் அதில் உள்ள காட்சிகளை பார்த்து ஹாலிவுட் தரத்திற்கு படம் உருவாகி இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒரு போஸ்டர் வெளியாகி இருந்தது என்பதும் அந்த போஸ்டரில் விஜய் தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு குடையின் கீழ் செல்வது போன்ற புகைப்படம் இருந்தது என்பதும் தெரிந்தது.
இந்த புகைப்படத்தில் உள்ள மூவருமே பின்பக்கத்தில் இருந்து காண்பிக்கப்பட்டிருந்ததால் விஜய் அருகில் இருக்கும் நடிகை யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த ரகசியத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உடைத்துள்ளார். இந்த புகைப்படத்தின் முன்பக்கத்தை வெளியிட்டுள்ள அவர் விஜய் அருகில் இருப்பது சினேகா என்பதை தெரிவித்துள்ளதை அடுத்து இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகைப்படத்திலிருந்து இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சினேகாவின் கணவராக விஜய் நடித்திருக்கும் நிலையில் அவர்களது மகனும் வளர்ந்து விஜய் ஆக தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த புகைப்படத்தில் சினேகா கர்ப்பமாக இருப்பது போன்று இருப்பதை அடுத்து அந்த குழந்தையும் விஜய் ஆகவிருக்கும் என்பதால் இந்த படத்தில் மூன்று விஜய் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2003 ஆண்டு வெளியான’வசீகரா’ என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்ததை அடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் பவதாரிணி பாடிய ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்துள்ளார் என்பதும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
China China ❤️
— Archana Kalpathi (@archanakalpathi) June 22, 2024
After two decades, a classic combo makes its comeback..
Let nostalgia sweep you off your feet at 6 PM 🫶🏻
Vocal by @actorvijay sir & #Bhavatharini 🎤
A @thisisysr magical 🎼
A @kabilanvai lyrical ✍🏼
A @vp_offl Hero#ChinnaChinnaKangal
HappyBirthdayThalapathy… pic.twitter.com/Iie3KesMyF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments