'பிகில்' திரைப்படம் ரூ.20 நஷ்டமா? அர்ச்சனா கல்பாதி விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,May 28 2020]

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’பிகில்’. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்தத் திரைப்படம் விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர் என அனைவருக்கும் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்ததாகவும் செய்திகள் உறுதி செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றில் ’பிகில்’ திரைப்படம் ரூபாய் 20 கோடி எனவும் இதனை இந்த படத்தின் தயாரிப்பாளரே உறுதி செய்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் தங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு திரைப்படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது

ஆனால் இந்த செய்தியை ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் மறுத்து உள்ளார். இப்படி ஒரு தகவலுடன் தான் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்றும் இது பொய்யான செய்தி என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனை அடுத்து ’பிகில்’ திரைப்படம் ரூபாய் 20 கோடி நஷ்டம் என்ற தகவல் வதந்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
 

More News

அடுத்தடுத்த அப்டேட்டுக்களை அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தான் இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வருவார் என்பது தெரிந்ததே

கொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரம் காட்டும் இந்தியாவின் 30 விஞ்ஞானக் குழுக்கள்!!!

இந்தியாவில் சுமார் 30 குழுக்களைச் சார்ந்த விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்து உள்ளார்.

கடும் வெப்பத்தால் தவித்து வரும் இந்திய மாநிலங்கள்!!!

தற்போது இந்தியாவின் பெரும் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் இன்றைய பாதிப்பு

அனுஷ்காவை டைவர்ஸ் செய்துவிடுங்கள்: விராத் கோஹ்லிக்கு பாஜக எம்.எல்.ஏ ஆலோசனை

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி உள்ளார் என்பது தெரிந்ததே.