'பிகில்' திரைப்படம் ரூ.20 நஷ்டமா? அர்ச்சனா கல்பாதி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’பிகில்’. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்தத் திரைப்படம் விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர் என அனைவருக்கும் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்ததாகவும் செய்திகள் உறுதி செய்யப்பட்டன.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றில் ’பிகில்’ திரைப்படம் ரூபாய் 20 கோடி எனவும் இதனை இந்த படத்தின் தயாரிப்பாளரே உறுதி செய்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் தங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு திரைப்படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது
ஆனால் இந்த செய்தியை ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் மறுத்து உள்ளார். இப்படி ஒரு தகவலுடன் தான் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்றும் இது பொய்யான செய்தி என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனை அடுத்து ’பிகில்’ திரைப்படம் ரூபாய் 20 கோடி நஷ்டம் என்ற தகவல் வதந்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
How about the #jail single soon ... #kaathodu sung by @dhanushkraja @aditiraohydari @KaviKabilan2 .... excited ?? ... updates soon ...
— G.V.Prakash Kumar (@gvprakash) May 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments