ரஜினி - லோகேஷ் படத்தின் அட்டகாசமான ஸ்டில்.. 'கோட்' தயாரிப்பாளரின் கமெண்ட்..!

  • IndiaGlitz, [Friday,March 29 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இயக்கம் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தின் போஸ்டர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு ரஜினி ரசிகர்களை குஷியாக்கியது என்பது தெரிந்தது.

இந்நிலையில் ’தலைவர் 171’ படத்தின் அட்டகாசமான போஸ்டரை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் தனுஷ் உட்பட பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தை தயாரித்து வரும் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் லோகேஷ் கனகராஜ் பதிவை டேக் செய்து ’இந்த படத்தை பார்க்க இனிமேலும் காத்திருக்க முடியாது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

திருமண ஆசை வந்துவிட்டதா? குக் வித் கோமாளி ஷிவாங்கி வைரல் பதிவு..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதலில் கோமாளியாகவும் அதன் பிறகு குக்காகவும் கலந்து கொண்ட ஷிவாங்கி தனது சமூக வலைதளத்தில் செய்த பதிவில் இருந்து அவருக்கு சினிமா திருமண ஆசை வந்துவிட்டதோ

அமீரை கைது செய்ய வந்த காவல்துறை.. 'மக்கள் போராளி' என்ற பட்டம்.. 'உயிர் தமிழுக்கு' வீடியோ..!

அமீர் நடித்த 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் அமீரை காவல்துறையினர் கைது செய்யும் காட்சி உள்ளது என்பதும்

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா: தேரோட்டம் கோலாகலம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

குழந்தைக்கு அவங்க அப்பாவையே அடையாளம் தெரியல கண் கலங்கிய கனி மற்றும் சக்தி கனி

சமீபத்தில் அப்பா இறந்து ஒரு வாரத்தில் தான் இந்த டாட்டூ குத்தி கொண்டோம்.பல சமயத்தில் தனியாக இருப்பது போல் எண்ணுவோம்.அதை எங்கள் அழுகை மூலமாக வெளிப்படுத்தி கொள்வோம்............

விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் டிவி பிரபலங்கள்