ரஜினி - லோகேஷ் படத்தின் அட்டகாசமான ஸ்டில்.. 'கோட்' தயாரிப்பாளரின் கமெண்ட்..!

  • IndiaGlitz, [Friday,March 29 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இயக்கம் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தின் போஸ்டர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு ரஜினி ரசிகர்களை குஷியாக்கியது என்பது தெரிந்தது.

இந்நிலையில் ’தலைவர் 171’ படத்தின் அட்டகாசமான போஸ்டரை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் தனுஷ் உட்பட பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தை தயாரித்து வரும் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் லோகேஷ் கனகராஜ் பதிவை டேக் செய்து ’இந்த படத்தை பார்க்க இனிமேலும் காத்திருக்க முடியாது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.