'புலி' பட ரிலீஸை பட்டாசு வெடித்து கொண்டாடிய பிரபல பெண் தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் அனைத்து தடைகளையும் தாண்டி முதல்காட்சி அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. முதல்காட்சியை விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'புலி' பட ரிலீசை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாதி அவர்கள் இன்று ஏஜிஎஸ் திரையரங்கு முன் பட்டாசு வெடித்து 'புலி' படத்தின் முதல்நாள் முதல் காட்சியை கொண்டாடினார். அவர் பட்டாசு வெடிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்புடன் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

மேலும் புலி படத்தின் ரிலீஸுக்கு முன்னணி நடிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 'புலி' படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனையை விஜய் அவர்களே நேரடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததற்காக விஜய்க்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.