தளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் சென்னையில் இந்த படத்தின் ஒரு சிறிய ஷெட்யூல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் காத்திருப்பதோடு, அவ்வப்போது ‘தளபதி 64’ அப்டேட் எப்போது? என தயாரிப்பாளர் தரப்பினர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனேகமாக ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளிவர வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தகவல்கள் கசிந்துள்ளது
இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த 63வது படமான ’பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ‘தளபதி 64 படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது பர்ஸ்ட் லுக் தேதி அல்லது ஏதாவது ஒரு அப்டேட் உடனடியாக எங்களுக்கு வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்
’பிகில்’ படத்தை அர்ச்சனா கல்பாதி தயாரித்து கொண்டிருந்தபோது தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதே போன்ற கேள்வியை அவரிடம் எழுப்பிய நிலையில் தற்போது அவர் பதிலுக்கு ‘தளபதி 64’ படத்தின் அப்டேட் வேண்டும் என்று ஒரு ரசிகையாக தனது வேண்டுகோளை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Will be great if we get a motion poster / first look date or some update #LetsAskforThalapathy64Update @XBFilmCreators @Jagadishbliss ??????
— Archana Kalpathi (@archanakalpathi) December 4, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments