'லவ் டுடே' படத்தின் அடுத்த லெவல்.. அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அர்ச்சனா கல்பாதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’கோமாளி’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’லவ் டுடே’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.
நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களே தோல்வி அடையும் நிலையில் சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய லாபம் என்பது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு ஜாக்பாட் என்று தான் கூற வேண்டும்.
பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாடப்பட்டது என்பதும் இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தமிழில் வெற்றி பெற்ற ’லவ் டுடே’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் மற்றும் ஃபாந்தோம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஹிந்தியில் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ’லவ் டுடே’ திரைப்படம் ஹிந்தியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#LoveToday is coming for Hindi audience .
— Pradeep Ranganathan (@pradeeponelife) February 20, 2023
Best wishes @FuhSePhantom @Ags_production https://t.co/v5ljz2Ca4O
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com