'லவ் டுடே' படத்தின் அடுத்த லெவல்.. அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அர்ச்சனா கல்பாதி..!

  • IndiaGlitz, [Tuesday,February 21 2023]

’கோமாளி’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’லவ் டுடே’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களே தோல்வி அடையும் நிலையில் சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய லாபம் என்பது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு ஜாக்பாட் என்று தான் கூற வேண்டும்.

பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாடப்பட்டது என்பதும் இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தமிழில் வெற்றி பெற்ற ’லவ் டுடே’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் மற்றும் ஃபாந்தோம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஹிந்தியில் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ’லவ் டுடே’ திரைப்படம் ஹிந்தியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரூ.1000 கோடி வசூலை எட்டிய 'பதான்'.. இதற்கு முன் 1000 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன?

 ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான நிலையில் ஒரே மாதத்தில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி என்ற வசூல் சாதனையை எட்டியுள்ளது 

மகன் அமீனுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் தனது மகன் அமீன் உடன் நடிக்கும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில்

ஜெயம் ரவியின் 'அகிலன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'அகிலன்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

காதல் மனைவியுடன் சஞ்சு சாம்சன்.. வைரல் புகைப்படங்கள்..!

ஐபிஎல் போட்டிகள் மூலம் பல திறமையான வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களின் ஒருவர் சஞ்சு சாம்சன் என்பது தெரிந்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் ஆரம்ப காலத்தில் கேரளாவில்

'தீர்க்கதரிசி' திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி