தளபதி விஜய்யின் 'கோட்' டிரைலர் தேதி.. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ‘கோட்’ படத்தின் டிரைலர் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாளை ‘கோட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் இணையதளங்கள் ஸ்தம்பிக்கும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Trailer Release date update tomorrow at 6:00 pm 🤗❤️ @vp_offl We are all waiting 😎
— Archana Kalpathi (@archanakalpathi) August 13, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com