'கோட்' படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி? அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,September 06 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக ’கோட்’ முதல் நாள் வசூலை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’கோட்’ திரைப்படம் நேற்று வெளியாகி ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாள் சாதனை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் ’கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் ’கோட்’ திரைப்படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

 

More News

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்  'கோலி சோடா ரைசிங்'  வெப் சீரிஸ்.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸினை, செப்டம்பர் 13 ஆம் தேதி முதல்,

'கோட்' போலவே இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. ஓடிடி ரிலீஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இந்த வாரம் திரையரங்கில் வெளியான நிலையில் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'கோட்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? 'லியோ'வை விட இத்தனை கோடி குறைவா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தை விட 40 கோடி குறைவாக 'கோட்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இருப்பதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவை அடுத்து பாலிவுட்டில் கலக்க போகும் பகத் பாசில்.. இயக்குனர் இந்த பிரபலமா?

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், தமிழ் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நிலையில் தற்போது பாலிவுட்டில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு சமையல் குறிப்புகள்

விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.