6க்கு 16.. மீண்டும் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்த த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில், விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் த்ரிஷா இணைந்ததாக புகைப்படங்கள் உடன் கூடிய தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் அர்ச்சனா கல்பாத்தி என்பதும், அதேபோல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா என்பதும் தெரிந்தது.

இருவரும் திரையுலகை தாண்டி நெருங்கிய தோழிகள் என்ற நிலையில், அர்ச்சனா கல்பாத்தி, த்ரிஷா உள்பட 6 பேர் வெளிநாட்டு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ஆறு பேருக்கு பதினாறு பெட்டிகள் என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதே போல், த்ரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 48 மணி நேரம் தூங்காமல் 24 மணி நேரம் பயணம் செய்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில், அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’டிராகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும், விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.