அர்ச்சனா கூறிய ஒரு வார்த்தை.. துள்ளி குதித்து ஆச்சரியம் அடைந்த பூர்ணிமா. காண்ட்டான மாயா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் என்ற டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டு அவர்களுக்கான பாடல் ஒலிக்கப்பட்டு நடனமாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை மையமாக வைத்து டான்ஸ் ஆடிய காட்சிகள் நேற்றைய எபிசோடில் இருந்தது என்பதும் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றைய எபிசோடு சுவாரசியமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் சிறப்பாக நடனமாடிய இருவரை தேர்வு செய்யும்படி பிக் பாஸ் கூற, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கூறுகின்றனர். தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரை பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர்.
ஆனால் அர்ச்சனா டிக்கெட் டு ஃபினாலேவில் பங்கேற்க முடியாது என்பதால் அவருடைய பாயிண்டை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என பிக் பாஸ் கூறுகிறார். இந்த நிலையில் சில நொடிகள் யோசித்த அர்ச்சனா ’பூர்ணிமாவுக்கு தன்னுடைய பாயிண்டை கொடுக்கிறேன்’ என்று கூறுகிறார். அதை கேட்டு பூர்ணிமா ஆச்சரியமடைந்து துள்ளி குதித்தார். அப்போது மாயா ’இவரோட ஃபேவரிட்சம் என்னுடைய கேமை பாதிக்குது’ என்று கூற பூர்ணிமாவும் அர்ச்சனாவும் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
மாயாவிடம் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடுகளுடன் இருக்கும் பூர்ணிமாவுக்கு தற்போது புதிய கூட்டாளியாக அர்ச்சனா கிடைத்துள்ளதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com