'என் மகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்கனும்ன்னு சொல்லலாமா? நிக்சனிடம் வருத்தப்பட்ட நபர் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பாக பூர்ணிமாவின் அம்மா, அர்ச்சனாவின் அம்மா அப்பா, சரவணன் விக்ரமின் அம்மா அப்பா மற்றும் விஜய் வர்மாவின் அம்மா ஆகியோர் வந்திருக்கின்றனர்
இந்த நிலையில் அர்ச்சனாவின் அப்பா, நிக்சனிடம் நீங்கள் ’என் மகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்கணும் என்று நீங்கள் சொல்லி இருக்க கூடாது, அதைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன்’ என்று கூறினார். அப்போது நிக்சன் அதிர்ச்சி அடைந்து ’நானா அப்படி சொன்னேன்? அர்ச்சனாவிடம் நேரடியாக சொன்னேனா? என்று கேட்க ’இல்லை நீங்கள் வேறு ஒரு நபரிடம் சொன்னீர்கள்’ என்று கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ச்சனா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போது சமையல் இன்னும் முடியவில்லை என்று கூறியதை கேட்டு ’இவளை எல்லாம் கள்ளிப்பால் கொடுத்து கொண்டு இருக்கணும் ’என்று நிக்சன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அதை மனதில் வைத்து தான் அர்ச்சனாவின் அப்பா, நிக்சனிடம் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அர்ச்சனாவின் அம்மாவும் நிக்சனிடம் ’நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள், ஆனால் கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள், கோபம் வரும்போது உடனே தண்ணீரை வாயில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விடுங்கள்’ என்று அறிவுரை கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com