டிக்கெட் டு ஃபினாலேவுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த அர்ச்சனா.. கூடவே இருந்து குழி பறித்தது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் இருவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் தங்களது முழு பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் பிக் பாஸ் திடீரென டிக்கெட் ஃபினாலேவுக்கு செல்லும் தகுதியற்ற இருவரை தேர்வு செய்யும் படி கூறுகிறார்,. இதனை அடுத்து விஷ்ணு, விக்ரமை கூறுகிறார். இதனை அடுத்து தினேஷ் அர்ச்சனாவை கூறுகிறார்.
தினேஷ் கூறும்போது, டிக்கெட் டு ஃபினாலே மதிப்பு என்ன என்பது அர்ச்சனாவுக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை, அதனால் நான் அர்ச்சனாவை தேர்வு செய்கிறேன் என்று கூறுகிறார்.
இதனை அடுத்து பெரும்பாலான போட்டியாளர்களின் கருத்தின்படி விஜய் வர்மா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் டிக்கெடு டு ஃபினாலேவுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்று பிக்பாஸ் கூறுகிறார்.
இது குறித்து அர்ச்சனா, விசித்திராவிடம் கூறிய போது ’தினேஷ் கூறிய காரணம் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, உண்மையிலேயே தினேஷ் எனக்கு ரொம்ப குளோஸ், அவர் கூடவே இருந்து அண்ணா அண்ணா என்று கூறினேன் என்று கூறுகிறார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு தினேஷ் மற்றும் அர்த்தனா இடையே சண்டை நடக்கும் போல் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com