சர்ஜரிக்கு பின் எப்படி இருக்கின்றார் அர்ச்சனா: மகளின் அப்டேட்

நடிகையும், தொகுப்பாளினியும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான அர்ச்சனா சமீபத்தில் தனக்கு மூளை அருகில் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அறுவை சிகிச்சை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதாகவும் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் மீண்டும் வருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது உடல் நிலை குறித்து அவ்வப்போது தனது மகள் ஜாரா, ரசிகர்களுக்கு அப்டேட் தருவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அர்ச்சனாவின் மகள் ஜாரா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் அர்ச்சனாவின் உடல்நிலை குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும் மருத்துவமனையில் இருக்கும் அவர் தீவிர சிகிச்சை மையத்தில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அம்மா அர்ச்சனா விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அர்ச்சனாவுக்கு வெற்றிகரமாக சர்ஜரி முடிந்து விட்டது என்பதும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.