கடிதத்தை பார்த்ததும் கதறியழுத அர்ச்சனா: வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான அர்ச்சனா கதறி அழுத காட்சியின் வீடியொ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயா டிவி, சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அர்ச்சனா. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது அர்ச்சனா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக உள்ளார்.

இந்த நிலையில் அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய போது அவரது மகள் ஸாரா அவருக்கு கடிதம் மற்றும் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை படித்து பார்த்த உடன் அர்ச்சனா உணர்ச்சி மிகுதியால் ஆனந்தக்கண்ணீருடன் கதறி அழுத காட்சியின் வீடியோ அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சனாவின் மகள் ஸாரா தனது தாயாரின் பெருமை குறித்து 7 பக்கங்களில் கடிதம் எழுதி உள்ளார் என்பதும் அந்த கடிதத்தை படித்து தான் அவர் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுததாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.