என்னைய வச்சு புரொஜக்ட் பண்ணினா செஞ்சு விட்ருவேன்.. அழுகும் அர்ச்சனாவுக்கு விஷ்ணு வார்னிங்..
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று விஷ்ணுவிடம் நான் அழுக மாட்டேன் என்று சவால் விட்ட அர்ச்சனா இன்று திடீரென அழுது கொண்டிருக்கும் காட்சியும், என்னை வைத்து புரொஜக்ட் செய்தால் செஞ்சு விட்ருவேன் என்று அர்ச்சனாவுக்கு விஷ்ணு வார்னிங் கொடுக்கும் காட்சியும் இன்றைய புரமோவில் உள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விஷ்ணு மற்றும் அர்ச்சனா ஆகிய இருவருக்கும் இடையே பயங்கரமாக மோதல் இருந்து வருகிறது
இந்த நிலையில் அர்ச்சனா திடீரென அழுக ஆரம்பித்ததை அடுத்து ’அவர் நடிக்கிறார் நடிக்கிறார், 100% நடிக்கிறார் என்று விஷ்ணு கூறுகிறார். ஆனால் அர்ச்சனா தன்னுடைய நிலையை விளக்குகிறார். நான் அந்த வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கவில்லை என்றும் அதனால் என் உள் மனதில் மிகப்பெரிய காயம் இருக்கிறது என்று கூறுகிறார்
ஆனால் விஷ்ணு ’அழுவது, சிரிப்பது, திடீரென ஆத்திரப்படுவது என்ற மல்டிபிள் ரியாக்சன் எல்லாம் ஒரு மனிதனுக்கு வராது, முழுக்க முழுக்க கேமராவுக்காக நடிக்கிறார் என்று சொல்ல இதுவரை அர்ச்சனாவுக்கு ஆதரவாக இருந்த விசித்ராவும் அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறார். அவர் கேமராக்காக நடிப்பது போல் தான் எனக்கும் தெரிகிறது என்று விசித்ராவும் கூறுகிறார். ’இவங்க ஹீரோயினாக என்னை வைத்து புரொஜக்ட் செய்ய நினைத்தால் செஞ்சு விட்டுடுவேன்’ என்று விஷ்ணு வார்னிங் கொடுக்கிறார்.
மொத்தத்தில் முதல் சீசனில் ஓவியா கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களால் தனித்து விடப்பட்டது போல் அர்ச்சனாவும் தனித்து விடப்பட்டது போல் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு பார்வையாளர்களின் ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments