அடிங்க பார்ப்போம், தைரியம் இருந்தா அடிங்க பார்ப்போம்.. ஓவியாவை ஞாபகப்படுத்திய அர்ச்சனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக விஷ்ணு மற்றும் அர்ச்சனா இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது என்பதும் இருவரும் காரசாரமாக வாதிட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
குறிப்பாக ’தொட்டால் சிணுங்கி’ என்ற பட்டத்தை அர்ச்சனாவுக்கு விஷ்ணு கொடுத்ததிலிருந்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய அடுத்த ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் காரசாரமாக சண்டை போடுகின்றனர்
’பொளிர் பொளிர்ன்னு நம்ம டயலாக்கில் வச்சு செய்யலாம்’ என்று விஷ்ணு கூற அதற்கு ’எங்க அடிச்சு காட்டுங்க பார்ப்போம்’ என்று அர்ச்சனா சவால் விடுகிறார். அதற்கு விஷ்ணு ’உங்களை நான் சொல்லவில்லை’ என்று கூற உடனே ’வேறு யாரை சொல்கிறீர்கள், இந்த மாதிரி கேவலமாக பேசுவது உங்களது தவிர வேறு யாருக்கும் முடியாது, என்ன மாதிரி உங்களால விதவிதமாக பெர்பார்ம் பண்ண முடியுமா? ஆள் வளர்ந்திருக்கு தவிர அறிவு வளரவில்லை’ என்று கூறுகிறார்.
அதற்கு விஷ்ணு மீண்டும் ’பொளிர் பொளிர்ன்னு அடிப்பேன்’ என்று சொல்ல அதற்கு உடனே அர்ச்சனா, ‘எங்க அடிங்க பார்ப்போம், உங்களால முடிஞ்சா, தைரியம் இருந்தா, அடிக்க பார்ப்போம்’ என்று அர்ச்சனா ஆவேசமாக பேசுகிறார்.
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளரான சக்தி, ஓவியாவை அடிப்பேன் என்று கூறிய போது ’எங்கே தைரியம் இருந்தால் அடிங்க’ என்று ஓவியா கூறியதை ஞாபகப்படுத்தும் அளவுக்கு அர்ச்சனாவின் செயல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments