நீங்களும் பூர்ணிமாவும் லவ்வர்ஸா? அர்ச்சனா கேள்வியால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு..!

  • IndiaGlitz, [Friday,November 24 2023]

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் ப்ரமோ வீடியோக்கள் அன்றைய எபிசோடை பார்க்கும் ஆவலை தூண்டி வருகிறது,. அந்த வகையில் சற்று முன் வெளியான இன்னொரு ப்ரமோவில் அர்ச்சனா மற்றும் விஷ்ணு காரசாரமாக மோதும் காட்சிகள் உள்ளன.

அர்ச்சனாவுக்கு தொட்டாசிணுங்கி என்ற பட்டத்தை விஷ்ணு வழங்கும்போது அது குறித்து அர்ச்சனா அவரிடம் வாதிடுகிறார். ஆரம்பத்தில் நான் அழுததற்காக மட்டும் என்னை தொட்டாசிணுங்கி என்று சொல்கிறீர்களா? என்று கேட்கிறார்.

அப்போது விஷ்ணு, ‘அர்ச்சனா எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்களோ, அந்த காரணத்துக்காக தான் நான் சொல்கிறேன் என்று சமாளித்தார். அப்போது அர்ச்சனா ’இப்போதும் நான் அழுது கொண்டிருப்பதை தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள், அதையே குத்திக் கொண்டே இருக்கிறீர்கள், அவங்க பண்ற நகைச்சுவைக்கு நானும் சிரிக்க வேண்டும், ஆனால் அவங்களுடைய நகைச்சுவைக்கு நான் மன வருத்தம் அடைந்தால் அதற்கு பெயர் நகைச்சுவை இல்லை’ என்று கூறுகிறார்.

அப்போது விஷ்ணு உங்களுடைய கேரியரில் அந்த ஒரு சம்பவம் மிகவும் ஹைலைட் ஆனது என்று கூற அதற்கு அர்ச்சனா பதிலடியாக ’நீங்களும் பூர்ணிமாவும் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள், அதனால் லவ்வர்ஸ் என்று சொல்லலாமா? என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு பதில் பேச முடியாமல் விஷ்ணு அதிர்ச்சியுடன் இருக்கும் காட்சிகளுடன் இன்றைய ப்ரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.