சின்னப்பையன் பயந்துட்டான்.. நிக்சன் குறித்து கூறிய அர்ச்சனா.. பதில் கேள்வி கேட்ட வினுஷா..!

  • IndiaGlitz, [Tuesday,January 09 2024]

பிக் பாஸ் வீட்டிற்கு வினுஷா மீண்டும் திரும்பி உள்ளதை அடுத்து அவர் தன்னை பற்றி நிக்சன் தரக்குறைவாக பேசியது குறித்து சக போட்டியாளர்களிடம் பகிர்ந்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

70 கேமரா முன் நிக்சன் கூறியதற்கு நானும் அதே கேமரா முன் பதில் கூற போகிறேன் என்று முந்தைய புரமோவில் வினுஷா கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த ப்ரோமோவில் அர்ச்சனாவிடம் இது குறித்து பேசுகிறார்.

உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது என்னுடைய பெயரை யூஸ் பண்ணி நீங்கள் நிக்சனை டார்கெட் செய்தீர்கள். இந்த விஷயத்தை அர்ச்சனா முதலிலே செய்திருக்கலாமே என்று கேட்டார். அதற்கு அர்ச்சனா ’உங்கள் பிரச்சனையை சொன்னால் அவனுக்கு கோவம் வரும் என்று தெரியும், நேற்று என்னை அவன் கோபப்படுத்தினான், அதற்கு பதிலாக கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக சின்ன பிள்ளைத்தனமாக உங்கள் விஷயத்தை எடுத்தேன் என்று கூறினார்

இதை அடுத்து எனக்கு அது பிடிக்கலை என்று வினுஷா, சாரி சொல்லிவிட்டால் மக்கள் மறந்துருவாங்க என்று நீங்கள் அவனிடம் சொன்னீர்கள் என்று கூற அதற்கு அர்ச்சனா, பயந்துட்டான் சின்ன பையன் என்று கூறியதொடு, அது முடிந்த விஷயம் என கூற, உங்களுக்கு அது முடிந்த விஷயம், ஆனால் நான் தானே அங்கே குற்றவாளியாக இருக்கிறேன்’ என்று வினுஷா கூற அர்ச்சனாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது.