கடைசி நேரத்தில் மட்டும் ஏன் சண்டை போடாம அமைதியா இருக்க? அர்ச்சனாவை கடுப்பேத்தும் விசித்ரா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆரம்பத்தில் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த நீ, இப்போது நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அமைதியாக ஏன் இருக்கிறாய் என அர்ச்சனாவை தூண்டி விடுவது போல் விசித்ரா கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவில், ‘ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தாய், அதன்பின் திடீரென நெகட்டிவ்வாக மாறினாய் என்று விசித்ரா கூற அதற்கு அர்ச்சனா, ‘நீங்கள் சொன்னது என்னை மிகவும் அதிருப்தி அடைய செய்தது என கூறினார். மேலும், ’நான் ஆரம்பத்தில் இருந்ததை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால் இன்று அதை நீங்கள் நடிப்பு என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேடார்.
இருந்தும் விசித்ரா விடாமல், 'நிகழ்ச்சி ஆரம்பத்தில் எல்லாரிடமும் சண்டை போட்டாய், ஆனால் நிகழ்ச்சி முடிவடையும்போது நீ அமைதியாக இருப்பது என்னை யோசிக்க வைக்கிறது என்று கூற அதற்கு அர்ச்சனா ’கேம் முடியும்போது நான் யாரிடமும் சண்டை போட வேண்டாம்’ என்று தோன்றுகிறது என்று கூறுகிறார்.
அதற்கு விசித்ரா ’ஆரம்பத்தில் இருந்து சண்டை போடாமல் இருந்திருக்கலாமே, இப்பதானே வந்தோம் சண்டை போடணும் என்று இருந்திருக்கலாமே என்று கேட்க, ’அப்போது எனக்கு அவ்வாறு தோன்றியது, இப்போது எனக்கு இவ்வாறு தோன்றுகிறது என்று கூற இருவரும் கடும் வாக்குவாதம் செய்கின்றனர்.
அதேபோல் 24 மணி நேர நிகழ்ச்சியை பார்க்கும்போது ’நீ ஏன் தினேஷிடம் மட்டும் சண்டை போட மாட்டேன் என்கிறாய் என்று விசித்ரா தூண்டிவிட்டார். தினேஷின் அப்பா அம்மாவை பார்த்தவுடன் அவர்களை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது, நான் தினேஷ் உடன் சண்டை போட்டுவிட்டு அவங்க வீட்டுக்கு போனா அவங்க முகத்தில் எப்படி விழிப்பேன்’ என்று தினேஷ் பதிலடி கொடுக்கிறார்.
மொத்தத்தில் அர்ச்சனா மறுபடியும் சண்டை போட வேண்டும் என்று விசித்ரா தூண்டிவிடுவது பார்வையாளர்களுக்கு அவர் மீதான மதிப்பை குறைத்துள்ளதாக தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments