நீங்க எங்கேயோ இருக்கீங்க.. எனக்கு தாங்க முடியாத அடி.. அர்ச்சனாவிடம் வன்மத்தை கக்கும் மாயா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் ஏழாவது சீசன் போல் வேறு எந்த சீசனிலும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் மீது வன்மத்தை கக்கியது இல்லை என்று பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக மாயா இந்த சீசனில் தனது எதிராளிகள் மீது வன்மத்தை கக்கியது மட்டுமின்றி தன்னுடைய குரூப்பில் இருக்கும் போட்டியாளர்கள் மீதும் வன்மத்தை திணித்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதனால் மிகச்சிறந்த புத்திசாலியாக கருதப்படும் மாயா, அவருடைய கேரக்டரால் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளராக மாறி உள்ளார்.
இந்த நிலையில் மாயா மற்றும் அர்ச்சனா உரையாடும் காட்சியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ’நான் உங்களுடைய அன்பை மதிக்கிறேன். நானும் உங்கள் மீது அன்பு செலுத்துகிறேன்’ என்று அர்ச்சனா கூறிய போது ’நான் உங்களை நம்பவில்லை, ஏனெனில் என்னால் நடிக்க கூட முடியாது. ஆனால் அதே டிராமா தான் சார் எனக்கும் என்று சொன்னபோது, சார் இவங்களுக்கு டிராமா எல்லாம் ஒன்னுமே இல்ல சார், நமக்கு டிராமா கொடுக்காமல் விடமாட்டாங்க சார்’ என்று நீங்கள் ஒரு வார்த்தை சொன்னீர்கள், அந்த வார்த்தை எனக்கு தாங்க முடியாத அடி.
அந்த நாளைக்கு அப்புறம் எனக்கு வெளியில் கூட சப்போர்ட் இல்லை. நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள். நான் என் நம்பிக்கையை இழந்தது அந்த நாளில் இருந்துதான், ஏனெனில் அர்ச்சனா கேட்ட கேள்வி தப்பு, அதுக்காக மட்டும்தான் நான் பேசுகிறேன்’ என்று மாயா கூறுகிறார்.
இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வரும் பார்வையாளர்கள் ’இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் அர்ச்சனா, உங்களுக்குத்தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வழங்க போகிறோம் என்று பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com