2,500 ஆண்டு பழமையான மம்மிக்கள்… புதைப்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழங்கால அரச வம்சத்தவர்கள் மற்றும் போர் வீரர்கள் ஆகியோர் உயிரிழக்கும்போது அவர்களின் உடல்களை பதப்படுத்தும் வழக்கம் (மம்மி) எகிப்து, சீனா போன்ற நாடுகளில் காணப்பட்டது. இதேபோல நம்ம ஊரிலும் பல முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது எகிப்து நாட்டின் கொய்ரோ பகுதியின் ஒரு இடத்தில் 2,500 ஆண்டு பழமையான பல மம்மிக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கொய்ரோ பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு இருந்த புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு 100 பழமையான சவப் பெட்டிகளை கண்டுபிடித்ததாகவும் அந்தப் பெட்டிகளில் 2,500 ஆண்டு பழமையான மம்மிக்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மம்மிக்கள் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டிகள் வர்ணம் பூசப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள் இது டோலமிட் அரச வம்சத்தினர் காலத்தை ஒத்ததாக இருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் 2,500 ஆண்டு பழமையான மம்மிக்களை அந்நாட்டின் கிசா பிரமிடுகளை ஒட்டியுள்ள கிராண்ட் எகிப்து அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. எகிப்து மன்னர்களின் நம்பிக்கைக்கும் அவர்களின் கலை நயத்திற்கும் இதுவரை ஏராளமான சான்றுகள் கிடைத்து இருக்கிறது. அதேபோன்ற ஒரு சான்றாக இந்த மம்மிக்கள் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
The mummy tomb, which has been sealed for 2500 years, has been opened for the first time. pic.twitter.com/KWGT95girv
— Psychedelic Art (@VisuallySt) October 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout