சூப்பர் ஹிட் ஆன படத்தின் 2ஆம் பாகத்தில் அரவிந்தசாமி?

  • IndiaGlitz, [Friday,September 02 2016]

தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, 'சதுரங்க வேட்டை 2' படத்தில் அரவிந்தசாமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். விரைவில் அவரது கால்ஷீட் குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒப்பந்தம் செய்யப்படும்' என்று கூறினர். மேலும் இந்த படத்தின் நாயகி தேர்வும் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும் என்றும் கூறினர்.

More News

அதர்வா படத்தில் நயன்தாராவுக்கு என்ன கேரக்டர்?

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் நயன்தாரா சமீபகாலமாக இளம் நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். ஆரி...

இளையதளபதி ரசிகர்களுக்கு ஒரு இனிக்கும் செய்தி

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது...

'விஜய் 60' படத்தில் இணைந்த மிரட்டல் வில்லன்

'தெறி' சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது...

ரஜினி-தனுஷ்-ரஞ்சித் படத்தின் வதந்திகளும் உண்மை நிலவரமும்

பொதுவாக ஒரு படம் சூப்பர் ஹிட் ஆனாலே அந்த படத்தின் ஹீரோவும், இயக்குனரும் மீண்டும் இணைந்து பணிபுரிவது என்பது கோலிவுட்டில் வழக்கமாக

எனக்கு 1, ரஜினிக்கு 1000. இதை சொன்ன பிரபல நடிகர் யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகிய 'ஜனதா கேரேஜ்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...