அரவிந்த்சாமி-த்ரிஷாவின் சதுரங்கவேட்டை-2 படத்தின் கூடுதல் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,September 23 2016]

'சதுரங்க வேட்டை 2' படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ள தகவலை ஏற்கனவே நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் குறித்த மேலும் சில விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
அதிகளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசையுடன் இருப்பவர்களை ஹைடெக்காக ஏமாற்றும் கதைதான் நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம். முதல் பாகத்தின் கதை தென்மாவட்டங்களை சுற்றி வந்த நிலையில், தினம் தினம் மெருகேறியவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை மிக தெளிவாகவும் விவரமாகவும் கூறும் படமாக "சதுரங்கவேட்டை 2" படம் உருவாகவுள்ளது.
சதுரங்க வேட்டை' முதல் பாகத்தை தயாரித்த மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'சலீம்' படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இயக்குகிறார். மேலும் முதல் பாகத்தை இயக்கிய H.வினோத் 'சதுரங்கவேட்டை 2' படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

தனுஷூக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்க அரிய வாய்ப்பு

தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த 'விசாரணை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளை குவித்தது என்பதை அறிவோம்.

அஜித்தை ஆத்திரப்பட வைத்த 'அஜித் 57' குழுவினர்

கோலிவுட் ஹீரோக்களில் அஜித் மிகவும் அமைதியானவர், படக்குழுவினர்களிடம் மிகவும் அன்பாக பழகுபவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும்..

'தொடரி' திரைவிமர்சனம் : தடம் மாறிய பயணம்

இயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் ‘தொடரி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

'ரேணிகுண்டா' இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படங்கள் கிட்டத்தட்ட மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகி வருகிறது. அதேபோல்...

'சதுரங்க வேட்டை 2': அரவிந்தசாமிக்கு ஜோடியாகும் நம்பர் 1 நடிகை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நட்டி நட்ராஜ் நடிப்பில் மனோபாலா தயாரிப்பில் வெளிவந்த 'சதுரங்க வேட்டை'...