சூர்யா - கார்த்தி இணையும் படத்தில் அரவிந்த்சாமி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா மற்றும் கார்த்தி இணையும் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி தற்போது ’வா வாத்தியாரே’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ’96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிக்கும் அடுத்த படமான ’கார்த்தி 27’ படத்தின் அப்டேட் இன்று மாலை ஐந்து மணிக்கும், ஏழு மணிக்கு வெளியாகும் என்று சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிகா மற்றும் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், சரண் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் இரண்டு அப்டேட்டுகள் இன்று அடுத்தடுத்து வெளியாக இருப்பதாகவும் மாலை 5 மணி மற்றும் மாலை 7 மணிக்கு வெளியாகும் இந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அநேகமாக இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Few journeys are meant to cross paths with each other. Sometimes more than once 🛣️
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 24, 2024
Get ready to take a peek into #Karthi27🚲 Today at 5 PM and 7 PM!#Production22 @Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl #Jyotika @rajsekarpandian #Rajkiran @SDsridivya #Jayaprakash… pic.twitter.com/e5dLjuYSSM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments