சூர்யா - கார்த்தி இணையும் படத்தில் அரவிந்த்சாமி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,May 24 2024]

சூர்யா மற்றும் கார்த்தி இணையும் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி தற்போது ’வா வாத்தியாரே’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ’96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடிக்கும் அடுத்த படமான ’கார்த்தி 27’ படத்தின் அப்டேட் இன்று மாலை ஐந்து மணிக்கும், ஏழு மணிக்கு வெளியாகும் என்று சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா மற்றும் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், சரண் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் இரண்டு அப்டேட்டுகள் இன்று அடுத்தடுத்து வெளியாக இருப்பதாகவும் மாலை 5 மணி மற்றும் மாலை 7 மணிக்கு வெளியாகும் இந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அநேகமாக இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

More News

முதல்முறையாக  அந்தரத்தில் பறந்த அனுபவம்.. 'கோட்' பட நடிகையின் வைரல் பதிவு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தில் நடிக்கும் நடிகை முதல் முறையாக அந்தரத்தில் பறந்த அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளரின் அதிரடி பதில்..!

இசைஞானி இளையராஜா தனது பாடலை பயன்படுத்தியதற்காக காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில்

ஊதி ஊதி வெறுப்பேற்றிய கணவர்.. கன்னத்தில் ஒரு பளார்.. அமலாபால் லேட்டஸ்ட் வீடியோ..!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரது தலை முடியை ஊதி ஊதி வெறுப்பேற்றிய கணவரை கன்னத்தில் செல்லமாக அடிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வாரம் விஷால் படம் உள்பட எத்தனை படங்கள்? ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ் படங்கள் உட்பட தென்னிந்திய படங்கள் குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் விஷால் நடித்த 'ரத்னம்'

மறுபடியும் இன்னொரு குழந்தையா? குட் நியூஸ் சொல்ல போகும் சஞ்சீவ் - ஆல்யா மானசா..!

சின்னத்திரை நட்சத்திரங்களான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா ஜோடி விரைவில் ஒரு நல்ல செய்தியை சொல்லப் போகிறோம் என்று தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை